பேரூர் பட்டீஸ்வரர் கோயில் :
கோயம்பத்தூரில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் பழமையான சைவ திருத்தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பழைய புகைப்படம்.
கோவை மத்திய சிறை :
தமிழ் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான கோவை மத்திய
சிறைச்சாலையின் பழைய புகைப்படம் இது. வானில் இருந்து மொத்த சிறை வளாகமும்
தெரியும்படி எடுக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவினாசி சாலை :
இன்றைய கோவையின் நாடித்துடிப்பாக இருக்கும் அவினாசி சாலையின் அரிய
புகைப்படம். எந்நேரமும் மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் இன்றைய
காலகட்டத்தில் இப்படியொரு காட்சியை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது
அல்லவா?
ஆங்கிலேயர் காலத்து உணவகம்:
ஆங்கிலேயர் காலத்தில் கோவையில் செயல்பட்டு வந்த பிரபலமான ஒரு உணகவத்தின் புகைப்படம்.
ரேஸ் கோர்ஸ் தேவாலயம் :
கோயம்பத்தூரின் அதி முக்கியமான பகுதிகளில் ஒன்றான ரேஸ் கோர்ஸில் 1870ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றின் புகைப்படம்.
ஸ்டேன்ஸ் மில் :
கோயம்பத்தூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தைவை என்றால் அவை நிச்சயம்
பஞ்சாலைகள் தான். அப்படி கோயம்பத்தூரில் முதன்முதலில் அமைக்கப்பட்ட
பஞ்சாலைகளில் ஒன்றான 'ஸ்டேன்ஸ்' மில்லின் புகைப்படம்.
ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் :
பாப்பநாயக்கன் பாளையத்தில் இருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலின் 'கழுகுப்பார்வை' புகைப்படம்.
கோயம்பத்தூர் ரயில் நிலையம்:
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவை ரயில் நிலையத்தில் அரிய புகைப்படம்.
டவுன் ஹால் :
கோயம்பத்தூரின் மிகவும் நெரிசல் மிகுந்த பரபரப்பான பகுதிகளில் ஒன்றான டவுன் ஹாலின் பழமையான புகைப்படம்.
ஒப்பனக்கார வீதி மசூதி :
கோவை டவுன் ஹால் பகுதியில் இருக்கும் ஒப்பனக்கார வீதியில் உள்ள மசூதியின் பழமையான ஓவியம்.
ரேஸ் கோர்ஸ் :
கோவையில் வி.ஐ.பி அந்தஸ்து பெற்ற இடமான ரேஸ் கோர்ஸ் பகுதியின் பழைய
புகைப்படம். இன்றைய ரேஸ் கோர்ஸையும் புகைப்படத்தில் இருக்கும் இடத்தையும்
ஒப்பிட்டு பார்க்க முடிகிறதா உங்களால் ??
கட்டவண்டி போராட்டம்:
1973ஆம் ஆண்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் நடைபெற்ற கட்டவண்டி போராட்டத்தின் புகைப்படம்.
ஸ்டேன்ஸ் பள்ளி :
கோவை நகரின் ஐகானிக் அடையாளங்களில் ஒன்றாக திகழும் நூற்றாண்டுகள் கடந்த ஸ்டேன்ஸ் பள்ளியின் பழைய புகைப்படம்
No comments:
Post a Comment